இந்த ஆண்டு டுவிட்டரில் செல்வாக்கு உடைய விஐபிக்கள் யார் யார்?
2018ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் முன்னணி இடத்தில் உள்ள டுவிட்டரில் இந்த ஆண்டு அதிக செல்வாக்கு பெற்றவர்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. இதன்படி டுவிட்டரில் செல்வாக்கு மிக்க ஆண்கள் பட்டியலில் இங்கிலாந்தை சேர்ந்த பாடகர் லியாம் பெய்ன் முதலிடத்தையும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2வது இடத்தையும், பிரபல அமெரிக்க பாடகர் ஜஸ்டின் பீபர் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா 4வது இடத்திலும், கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 5வது இடத்திலும் உள்ளனர்.
இந்த பட்டியலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் 8வது இடத்திலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 10வது இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த ஆண்டு செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் அமெரிக்க பாடகி டெய்லர் ஸ்விப்ட் முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரி 2வது இடத்திலும், டிவி நடிகை கிம் கர்தாஷியன் 3வது இடத்திலும். பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் 8வது இடத்திலும் உள்ளனர்.