இந்த தேசம் மக்களால் உருவாக்கப்பட்டது, நிலப்பரப்புகளால் அல்ல. ராகுல்காந்தி
காஷ்மீர் விவகாரம் குறித்து ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘ஜம்மு காஷ்மீரை இரண்டாவதாக உடைப்பதன் மூலமாகவோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை சிறையில் அடைப்பதும் மூலமாகவோ, அரசியலமைப்பை விடுவதன் மூலமாகவோ, தேசிய ஒருங்கிணைப்பு மேம்படாது.
இந்த தேசம் மக்களால் உருவாக்கப்பட்டதே, நிலப்பரப்புகள் அல்ல. இந்த துஷ்பிரயோகத்தால் நாட்டின் பாதுகாப்பில் மிகவும் மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்று கூறியுள்ளார்
இந்த நிலையில் காஷ்மீர் மசோதாவுக்கு ஆதரவு இல்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் சீரமைப்பு மசோதாவை திரிணாமல் காங்கிரஸ் ஆதரிக்காது என்றும் காஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமானால் சம்பந்தப்பட்ட அனைவரும் பேச வேண்டியது அவசியம் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்