இந்த தைரியம் ஏன் ஜெயலலிதா இருந்தபோது இல்லை? கமலுக்கு தமிழிசை கேள்வி
அதிமுக அரசு மீது கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக, குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் கடுமையான விமர்சனத்தை வைத்து வருகிறார். அனைத்து துறைகளிலும் ஊழல், ஊழலில் பீகாரை பின்னுக்கு தள்ளிவிட்டது போன்ற கமலின் விமர்சனங்கள் ஆட்சியாளர்களை ஆத்திரத்தை வரழைக்கும் வகையில் இருந்தது.
இந்த நிலையில் கமல்ஹாசனின் விமர்சனம் குறித்து பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியபோது அதிமுக அரசு மீது குறைசொல்ல ஜெயலலிதா இருக்கும் போது கமலுக்கு தைரியம் இருந்தா? என்று பாகேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: அதிமுக அரசு மீது குறை சொல்ல மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது கமலுக்கு தைரியம் இருந்ததா? இப்போது மட்டும் ஏன் குறை கூறுகிறார். சினிமா துறையின் கஷ்டப்படுகிற குடும்பங்களுக்கு உதவி செய்வதில் கமல் கவனம் செலுத்த வேண்டும். அதோடு முதலில் சினிமா துறையின் குறைகளை சரி செய்யும் வேலையை செய்தாலே போது, அரசியலைப் பற்றி பின்பு பார்க்கலாம். கடந்த ஆண்டு துணிச்சலாக எந்த கருத்தையும் தெரிவிக்காத கமல், தற்போது ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஏன் பேசுகின்றார் என்று கமலை விமர்சித்துள்ளார்.