இந்த பொருட்கள் காலாவதி ஆவது எப்போது தெரியுமா?

இந்த பொருட்கள் காலாவதி ஆவது எப்போது தெரியுமா?

ஒரு பொருள் பாக்கெட்டில் அடைத்து விற்கப்பட்டால் அதன் காலாவதி தேதி என்ன என்பதை உடனே பார்ப்போம் அல்லவா? ஆனால் ஒருசில பொருட்கலுக்கு காலாவதி தேதியே இருக்காது. அந்த பொருட்களின் காலாவதி காலம் குறித்து தெரிந்து கொள்வோமா!

1. தலையணை

தூங்கும்போது தலையணைதான் சிறந்த துணை. ஆனா, நம்மில் பலபேர் தலையணைய எத்தனை நாளுக்கு ஒருமுறை மாத்தி இருக்கோம்னு யோசிச்சுப் பாருங்க? சிலபேருக்கு மாத்துனமாதிரி நினைவே இருக்காது. அவங்க எல்லாம் உடனே போய் வேற தலையணை வாங்கிடுங்க. ஏன்னா வீட்டில் இருக்கிற முக்கால்வசி குப்பை தலையணை மேலதான் படிஞ்சு கிடக்கும். மூட்டைப்பூச்சி எல்லாம் தலையணை மேலதான் முட்டை வைக்கும். நமக்கு வர்ற கழுத்து வலிக்கெல்லாம் இதுதான் பாஸ் காரணம். உங்க கழுத்து வலிக்காக நீங்க செலவு செய்யும் பணம் ஒரு தலையணை வாங்குற காசைவிட ரொம்பவே அதிகம்.

2. செருப்பு

செருப்பு இல்லாம நாம வெளியிலயே போகமாட்டோம். ஆனா ஒருநாளாவது நாம கைகால் கழுவுற மாதிரி செருப்பை கழுவியிருக்கோமா? அப்படி கழுவாததுனால என்னென்ன பிரச்னை வரும் தெரியுமா? நம்ம கண்ணுக்கே தெரியாத பூஞ்சை வளரவும் பரவவும் செருப்புதான் நல்ல இடம்னு சொல்றாங்க. முடிஞ்சா ஆறு மாசத்துக்கு ஒருதடவ மாத்துங்க. அதுமட்டுமல்ல, செருப்பை தினமும் நல்லா கழுவுங்க.

3. துண்டு

சிலபேர் சென்டிமென்ட்னு சொல்லி பலவருஷத்துக்கு ஒரே துண்டை பயன்படுத்துவதுண்டு. ஆனால், குளிச்சு முடிச்சு நாம காயப் போட்ற துண்டுலதான் பாக்டீரியா பூஞ்சை எல்லாம் நல்லா வளரும். என்னதான் துவைச்சாலும் போகவே போகாது. அட்லீஸ்ட் ஒரு வருஷத்துக்கு ஒரு துண்டையாவது மாத்திடுங்க.

4.டூத் ப்ரஷ்

அதுல இருக்குற பிரிஸ்டில்ஸ் எல்லாம் அதுவா உதிர்ந்து போற வரைக்கும் மாத்தாத ஆள் எல்லாம் இருக்காங்க. உங்களுக்கு காய்ச்சலோ சளியோ இருந்துச்சுனா அப்போ பயன்படுத்துன டூத்பிரஷ் கூட அடுத்த முறை பயன்படுத்தக் கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். பத்து ரூபாய்க்கு கஞ்சத்தனப்பட்டா பல் மருத்துவர்கிட்ட பல ஆயிரங்கள் மொய் வைக்க வேண்டி வரும் பாத்துக்கோங்க.

5.சீப்பு

குறிப்பா பெண்களுக்கு “சீப்புதாங்க முடிக்கு பெரிய ஆப்பு”. பயன்படுத்தி முடிச்சுட்டு ஒவ்வொருமுறையும் நல்லா சுத்தப்படுத்தி வைங்க. ஒருத்தர் பயன்படுத்துன சீப்ப இன்னொருத்தர் பயன்படுத்தாதீங்க. முக்கியமா ஒரு வருஷத்துக்கு ஒரு சீப்பாயாவது மாத்துங்க.

6.வாசனை திரவியங்கள்

பாட்டில்ல எக்ஸ்பயரி தேதி 3 வருஷம்னு போட்டிருந்தா நீங்க இரண்டு வருஷத்துல தீர்த்து தூக்கி போட்டுடணும். மூடியிருக்கும்போது மூணு வருஷம் நல்லா இருக்கும். ஆனால், நீங்க திறந்து பயன்படுத்த ஆரம்பிச்ச அப்புறமும் அப்படியே இருக்காது பாத்துக்கோங்க.

7.உள்ளாடைகள்

ஒரே உள்ளாடைய அதிக நாளைக்கு பயண்படுத்த வேண்டாம். பெரும்பாலான தோல் சார்ந்த பிரச்னைகள் இதனால அதிகமா வரும். “படர்தாமரை ” போன்ற பிரச்னைகள் எல்லாம் வருது. அளவு, வடிவம் மாறிப் போன உடனேயோ, அல்லது ஆறு மாசத்துக்கு ஒருதடவையோ கண்டிப்பா புது உள்ளாடைய வாங்கிப் பயன்படுத்துங்க.

8. மல்ட்டி பின் சுவிட்ச் பாக்ஸ்

வீடுகளில் இருக்கும் சுவிட்ச் பாக்ஸுக்கும் ஒரு கெப்பாஸிட்டி இருக்கு ப்ரோ. அது தாண்டி போன அப்புறமும் அதவே பயன்படுத்திட்டு இருந்தீங்கனா வீபரீதமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும். குறிப்பிட்ட கால அளவு என இல்லை. ஆனால், உடைந்துபோன, ஷார்ட் சர்க்யூட் ஆகும் ஸ்விட்களை உடனடியாக மாத்திடுங்க.

9. சமையல் பொருள்கள்

அரிசி மாவு, கோதுமை மாவு எல்லாம் அரைச்சு அதிகநாளைக்கு வெச்சுக்காதீங்க. தேவையான அளவுக்கு மட்டும் ஸ்டாக் வெச்சுக்கோங்க. இவையெல்லாம் கெட்டுப்போச்சானு கண்டுபிடிக்கிறது கொஞ்சம் கஷ்டம். வாசனைப் பொருள்கள் கிராம்பு ,திப்பிலி, சுக்கு இதெல்லாம் ரொம்ப நாளைக்கு வாசமா இருக்கும். ஆனா, குறிப்பிட்ட நாளுக்குள்ள அதோட சுவையை இழந்து போயிடும். ஆறு மாசத்துக்கு மேல இவற்றை சேமித்து பயண்படுத்துற பழக்கமிருந்தா இன்னிக்கே கை விட்டுடுங்க.

Leave a Reply