இந்த போன் அழைப்பு உங்களுக்கு வந்ததா? அப்போ உங்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி நிச்சயம்!

GoldLoan

இந்த போன் அழைப்பு வந்தால் உங்களுக்கு நகை கடன் தள்ளுபடி உறுதி என்ற தகவல் தமிழ்நாடு முழுவதும் பரவி வருகிறது

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்ய தமிழக அரசு முடிவு எடுத்த நிலையில் ஐந்து சவரன் நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்கியவர்களின் பட்டியல் தற்போது கூட்டுறவு துறை அதிகாரிகளால் எடுக்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில் நகைக்கடையில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படுபவர்களுக்கு வங்கியில் இருந்து போன் அழைப்பு வருவதாகவும் உங்கள் நகை கடன் தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் உங்கள் ஆதார் கார்டு குடும்ப அட்டை உங்கள் குடும்பத்தினரின் ஆதார் அட்டையை கொண்டு வந்து சமர்ப்பியுங்கள் என்று கூறுவதாகவும் செய்திகள் வருகின்றன

இந்த அழைப்பு வந்த அனைவருக்குமே கூட்டுறவு கடன் தள்ளுபடி உறுதி என்பதால் என்று கூறப்படுகிறது. உங்களுக்கும் இந்த அழைப்பு வந்து இருந்தால் உங்களுக்கும் கடன் தள்ளுபடி நிச்சயம் என்பது குறிப்பிடத்தக்கது