இனிமேல் அதிகாலை 4.30 மணிக்கே மெட்ரோ ரயில்! பயணிகள் மகிழ்ச்சி

இனிமேல் அதிகாலை 4.30 மணிக்கே மெட்ரோ ரயில்! பயணிகள் மகிழ்ச்சி

சென்னை மெட்ரோ ரயில் தற்போது தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில் இனிமேல் அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை கூடுதலாக 2 மணி நேரம் ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும் இந்த வசதி 2 வாரத்துக்கு மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து நிரந்தரமாக அதிகாலையில் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அதிகாலை 4.30 மணி, 5 மணி, 5.30 மணி என அரைமணி நேரத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும், அதன் பிறகு பீக் அவர்சில் ஒவ்வொரு 7 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், சாதாரண நேரங்களில் 14 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும், ரயில் நேரம் அதிகரிப்பு மூலம் விமான நிலையத்துக்கு செல்லும் பயணிகள் பெரிதும் பயன் பெறுவார்கள் என்றும் மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply