இனிமேல் நாப்கின்கள் ‘யூஸ் அண்ட் த்ரோ’ இல்லை: துவைத்து பயன்படுத்தலாம்

இனிமேல் நாப்கின்கள் ‘யூஸ் அண்ட் த்ரோ’ இல்லை: துவைத்து பயன்படுத்தலாம்

இதுவரை பெண்கள் நாப்கின்களை பயன்படுத்திவிட்டு குப்பைகளில் போட்டு வரும் நிலையில் உள்ளாடைகள் போல் துவைத்து மீண்டும் பயன்படுத்தும் நாப்கின்களை கோவையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தயாரித்து சாதனை புரிந்துள்ளார்.

கோவையை சேர்ந்த இளம்பெண் இஷானா என்பவர் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் பிரச்னையாக உள்ள சானிடரி நாப்கின்களுக்கு மாற்றாக ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் கடந்த சில மாதங்களாக இருந்துள்ளார்

இந்த நிலையில் தீவிர ஆலோசனைக்கு பின் ஒருமுறை மட்டும் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் சானிடரி பேட்களுக்கு பதிலாக மக்கும் பருத்தி துணிகளாலான நாப்கினை தயாரித்துள்ளார். இந்த நாப்கின்களை உள்ளாடைகள் போன்று துவைத்து மீண்டும் பயன்படுத்த முடியும் என அவர் கூறுகிறார்

இந்த நாப்கின்களை பயன்படுத்திய பெண்கள் கூறியபோது, ‘முழுவதும் துணிகளால் தயாரிக்கப்படும் பருத்தி நாப்கின்கள் மக்கும் தன்மை கொண்டதால் மண்ணுக்கும், சுற்றுச்சூழலுக்கு உகந்தைவையாக இருக்கிறது. ஆரம்பத்தில் பருத்தி நாப்கினுக்கு மாறுவதில் சில சங்கடங்கள் இருந்தாலும், பிறகு மிகவும் எளிதாகவும், வசதியாகவும் இருப்பதாக கூறுகின்றனர்

Leave a Reply