இனி மெட்ரோ ரயிலில் கூட்டம் இருக்காது! அசத்தலான புதிய அறிவிப்பு

இனி மெட்ரோ ரயிலில் கூட்டம் இருக்காது! அசத்தலான புதிய அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயிலை அதிக பயணிகள் தற்போது பயன்படுத்தி வருவதால் காலை, மாலை வேளைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் சில பயணிகள் நின்றுகொண்டு பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது

இதனையடுத்து பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு இன்று முதல் வண்ணாரப்பேட்டை – விமான நிலையம் இடையே காலை மற்றும் மாலையில் பீக் அவர்ஸில் 5 நிமிடத்துக்கு ஒரு முறை மெட்ரோ ரயில்கள் நேற்று முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இனிமேல் பயணிகள் நின்று கொண்டு பயணம் செல்ல வேண்டிய நிலை ஏற்படாது

இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வண்ணாரப்பேட்டை – விமான நிலையம் இடையிலான எல்ஐசி, ஏஜி-டிஎம்எஸ் வழித்தடத்தில் 7 நிமிடத்திற்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்படும். பயணிகளின் சேவையை அதிகரிக்கும் வகையில் காலை 8 மணி முதல் 11 வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்படும். மற்ற நேரங்களில் இனி 7 நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில் இயக்கப்படும்.

அதேபோல் சென்னை சென்ரல் -மவுண்ட் ரயில் நிலையம் இடையே காலை 8மணி முதல் காலை 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில் இயக்கப்படுகிறது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply