இனி வாழ்நாள் முழுவதும் காவி வேட்டி தான்: விஜய்க்கு வந்த மர்ம கடிதம்!

இனி வாழ்நாள் முழுவதும் காவி வேட்டி தான்: விஜய்க்கு வந்த மர்ம கடிதம்!

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வீட்டிற்கு வந்த மர்ம கடிதம் ஒன்றில் ‘முதல் தவணையாக காவி வேட்டி அனுப்பியுள்ளோம். இனி ஒவ்வொரு தவணையாக காவி வேட்டி அனுப்பிக் கொண்டே இருப்போம். ஏனென்றால், வாழ்நாள் முழுவதும் நீங்கள் காவி வேட்டியே அணிய வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்துடன் ஒரு காவி வேட்டியும் பார்சல் வந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தேர்தல் முடிவு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விஜய் தந்தை எஸ்.ஏ.சி, ‘தேர்தல் முடிவுக்கு பின்னர் மக்கள் அனைவரும் காவி வேட்டி கட்டிக்கொண்டு அலையப் போகின்றார்கள் என்று பாஜகவை மறைமுகமாக தாக்கி பேசினார். இதற்கு பதிலடியாகத்தான் காவி வேட்டி பார்சலும் கடிதமும் வந்துள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply