இன்கமிங் அழைப்பை கட் செய்துவிடுவோம்: பயமுறுத்தும் ஏர்டெல், வோடோபோன்
ரூ.35க்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் இன்கமிங் அழைப்பை கட் செய்துவிடுவோம் என ஏர்டெல், வோடோபோன் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை பயமுறுத்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜியோ நிறுவனம் வழங்கும் அதிரடி சலுகைகளால், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை பயன்படுத்துவதில்லை. அப்படியே பயன்படுத்தினாலும் இன்கமிங் அழைப்புக்கு மட்டும் வைத்து கொள்கின்றனர். இதனால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
இவ்வாறு ஏற்படும் பெரும் வருமான இழப்பை தடுக்க, மாதம் ரூ.35க்கு கட்டாயம் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற திட்டத்தை ஏர்டெல், வோடோபோன் நிறுவனம் அமல்படுத்த உள்ளது.
குறைந்தபட்ச தொகையான 35 ரூபாய்க்கு ரிசார்ஜ் செய்யவில்லை என்றால், இனி இன்காமிங் கால் வசதியும் இருக்காது. இதனால் 20 கோடி வாடிக்கையாளர்களின் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.