இன்னும் ஒரு வாரத்தில் திருமணம்: செளந்தர்யாவின் ஜாலி டுவீட்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா ரஜினியும், வஞ்சகர் உலகம்’ பட நாயகனும் தொழிலதிபருமான விசாகனும் வரும் 11ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளனர். இந்த திருமணத்திற்கான அனைத்து பணிகளும் நடந்து வருகிறாது.
இந்த நிலையில் செளந்தர்யா ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் என்றும், . விசாகன் ஃபேமிலியுடன் இணைவதில் மகிழ்ச்சி’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த டுவீட்டின் கமெண்ட் பகுதியில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
செளந்தர்யா ரஜினிக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தும் ஆகிவிட்டது என்பதும் அவருக்கு ஒரு குழந்தை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.