இன்ப அதிர்ச்சி தந்த மகளை துப்பாக்கியால் சுட்ட தாய்!

இன்ப அதிர்ச்சி தந்த மகளை துப்பாக்கியால் சுட்ட தாய்!

அமெரிக்காவில் திடீரென வீட்டுக்கு வந்து இன்ப அதிர்ச்சி தர முயன்ற மகளை அவரது தாயே தெரியாமல் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவரின் மகள் நீண்ட நாட்கள் கழித்து விடுமுறைக்கு வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால் தாய்க்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் திடீரென வீட்டிற்குள் நுழைந்தார். இதனால் வீட்டில் திருடன் புகுந்துவிட்டதாக தவறாக நினைத்த அந்த தாய் துப்பாக்கியால் சுட்டார். நல்ல வேளையாக குண்டு கையில் பட்டதால் மகள் உயிருக்கு ஆபத்து இல்லை.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்ய முன்வந்தனர். ஆனால் மகள் புகார் கொடுக்க மறுத்ததை அடுத்து போலீசார் தாயை எச்சரித்துவிட்டு திரும்பி சென்றதாக கூறப்படுகிறது

Leave a Reply