பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கடந்த மார்ச் மாதம் 7 கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு நடைமுறையில் உள்ளது
இந்த நிலையில் இன்று இம்மாத கடைசி ஞாயிறு என்பதால் இன்றுடன் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு முடிவுக்கு வருமா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
செப்டம்பர் மாதம் முதல் எந்த மாநிலமும் நோய் கட்டுப்பாட்டு பகுதி இல்லாத இடங்களில் முழு ஊரடங்கை அறிவிக்கக் கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளதால் இன்றுடன் முழு ஊரடங்கு தமிழகத்தில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
முழு ஊரடங்கு என அறிவித்தாலும் அதற்கு முந்தைய நாள் மக்கள் சமூக இடைவெளியின்றி மக்கள் இறைச்சி, மீன் போன்ற அசைவ உணவுகளை வாங்குவதால் முழு ஊரடங்கிற்கு அர்த்தம் இல்லாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.