இன்று இந்திராகாந்தியின் 100வது பிறந்த நள்: மன்மோகன் சிங், ராகுல் காந்தி மரியாதை
முன்னாள் பிரதமர் இந்தியா காந்தியின் 100-வது பிறந்த தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் காசுமீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேருவிற்கும், கமலா நேருவுக்கும் மகளாகப் பிறந்தார். இந்திரா பிரியதர்சினி என்பது அவரது இயற்பெயர்.
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளான இந்திரா காந்தி இந்தியாவின் மூன்றாவது மற்றும் முதல் பெண் பிரதமர் ஆவார். பெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி.
இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் 1966-ம் ஆண்டு ஜனவரி 19-ந்தேதி பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார்.
பாகிஸ்தானில் இருந்து பிரித்து வங்காளதேசம் எனும் தனிநாட்டை உருவாக்கியது, ரா உளவுப்பிரிவு உருவாக்கியது என பல முன்னேற்ற திட்டங்களை அவர் கொண்டு வந்துள்ளார்.
1984-ம் ஆண்டில் பாதுகாவலர்களாலே இந்தியா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில், அவரது 100-வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்