இன்று பெண் குழந்தைகள் தினம்: பெண் குழந்தைகளை போற்றுங்கள்
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஜனவரி 24ஆம் தேதி பெண் குழந்தைகள் அனுசரிக்கபப்ட்டு வரும் நிலையில் இன்று நாடு முழுவதும் அதை ஒரு கொண்டாட்டம் போல் நடத்தி வருகின்றனர்.
இந்த நாளை கொண்டாடுவதின் நோக்கமே பாலின வேறுபாடுகளை நீக்கவும், பெண் குழந்தைகளின் நிலையை மேம்படுத்தவுமே ஆகும்
தற்போது பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருவதை அடுத்து இனி வருங்காலத்தில் பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணமே அனைவரின் மனதிலும் எழ வேண்டும் என்பதற்காகவே இந்த கொண்டாட்டம்
சிறுவயது திருமணங்களை தடுத்து, பெண் குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளித்து பாலியல் தொல்லைகளில் இருந்து முற்றிலும் காப்பாற்ற வேண்டியது இந்த சமூகத்தின் கடமை. இந்த நாளில் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம் என ஒவ்வொரு இந்தியனும் உறுதி ஏற்க வேண்டிய நாள் என்பது குறிப்பிடத்தக்கது