இன்று மதிமுக, விசிகவுடன் திமுக பேச்சுவார்த்தை! தலா 2 தொகுதிகளா?
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுவை உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்டமாக இன்று விசிக மற்றும் மதிமுகவுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது
இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகிய இருவரும் இன்று அண்ணா அறிவாலயம் வரவுள்ளனர்.
திருமாவளவன் மற்றும் வைகோவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரு கட்சிகளுக்கும் தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்குவார் என்று கூறப்படுகிறது. இரண்டு தொகுதிகளுக்கு விசிக ஒப்புக்கொள்ளும் என்றும் மதிமுக குறைந்தது நான்கு தொகுதிகளாவது கேட்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது