தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்
கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு செய்த செலவுகள் திட்டங்கள் மற்றும் பல்வேறு அம்சங்கள் இந்த வெள்ளை அறிக்கையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இந்த வெள்ளை அறிக்கை குறித்து காரசாரமான விவாதங்கள் அதிமுக மற்றும் திமுக எம்எல்ஏக்கள் இடையே நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது