மத்திய மற்றும் தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள அறிக்கை ஒன்றில் நேற்று முன்தினம் மத்திய மற்றும் தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது
இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது
அதுமட்டுமின்றி புதுச்சேரியிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது