இன்றைய ராசிபலன்கள் 05/10/2018
மேஷம்
இன்று குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய கசப்புகள் மாறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
ராசி பலன்கள்
ரிஷபம்
இன்று எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5
ராசி பலன்கள்
மிதுனம்
இன்று எதிர்ப்புகள் அகலும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
ராசி பலன்கள்
கடகம்
இன்று தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன்மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7
ராசி பலன்கள்
சிம்மம்
இன்று அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையைக் காண்பீர்கள். அதேநேரம் தான் உண்டு தன் வேலையுண்டு என்கிற ரீதியில் பணியாற்றி அனைத்துப் பிரச்னைகளிலிருந்தும் ஒதுங்கி இருங்கள். வியாபாரிகளுக்கு லாபம் பெருகும். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் லாபகரமாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
ராசி பலன்கள்
கன்னி
இன்று உடன்பணிபுரிவோர் உங்களிடம் நட்புடன் பழகுவார்கள். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். மற்றபடி போட்டிகளை சாதுர்யமாக சமாளிக்கவும். மேலும் படிப்படியாகத்தான் வளர்ச்சி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
ராசி பலன்கள்
துலாம்
இன்று ஓரளவு வருமானத்தைக் காண்பீர்கள். பலரின் மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும். திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். மற்றபடி பணியாட்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். வழக்கு விவகாரங்களில் கவனத்துடன் இருக்கவும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5
ராசி பலன்கள்
விருச்சிகம்
இன்று புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களின் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். பேச்சாற்றல் அதிகரிக்கும். துறையில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்களின் தனித் தன்மையை வெளிப்படுத்துவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
ராசி பலன்கள்
தனுசு
இன்று பெண்மணிகளுக்கு அமைதியான நாளாக அமைகிறது. தெய்வ வழிபாட்டில் சிரத்தையுடன் ஈடுபடுவீர்கள். உடல் நலம் சீராக இருக்கும். சகோதர, சகோதரிகள் தேவைக்கேற்ப உதவிகளைச் செய்வார்கள். ஆனால் வருமானம் சுமாராகவே இருக்கும். தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7
ராசி பலன்கள்
மகரம்
இன்று எவருக்கும் அவசரப்பட்டு வாக்கு கொடுக்கமாட்டீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்படுவார்கள். பெரிய எதிர்பார்ப்புகள் கைகூடும். அரசாங்க வழியிலும் சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9
ராசி பலன்கள்
கும்பம்
இன்று இதுவரை இல்லத்திற்கு வராத உறவினர்கள் இன்று வருவார்கள். பண வரவு நன்றாக இருக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் ஈடுபடுவீர்கள். ஆனாலும் அனைத்து விஷயங்களும் முடியும் வரை ஒரு பயம் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
ராசி பலன்கள்
மீனம்
இன்று ராசிநாதன் குருவின் கருணையினால் தைரியத்துடன் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். கஷ்டங்களை திறமையாக எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். நுட்பமான விஷயங்களிலும் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியளிக்கும் செய்தி வந்து சேர்ந்து உங்களை திக்குமுக்காட வைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
ராசி பலன்கள்