இன்றைய ராசிபலன்கள் 07.12.2019
மேஷம்:
இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகள் உங்கள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பது மந்திற்கு இதமளிக்கும். வழக்குகளை தள்ளிப்போடுவது நல்லது. எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9
ரிஷபம்:
இன்று புதிய நபர்களின் அறிமுகம் நன்மை உண்டாக்கும். ஆனால் குடும்ப விஷயங்களை கூறாமல் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு எடுத்த காரியத்தை செய்துமுடிப்பதில் இழுபறியான நிலை காணப்படும். சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3
மிதுனம்:
இன்று வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் அவசியம். அரசியல் துறையினருக்கு எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் தடங்கல் உண்டாகும். பணவரத்து கூடும். புதிய காரியங்களை முடிக்க அதிகம் அலையவேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6
கடகம்:
இன்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். மாணவர்கள் மற்றவர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடக்கும் முன்பு அது சரியா தவறா என்று யோசித்து பார்ப்பது நல்லது. பாடங்களை படிப்பதில் கவனம் தேவை. கெட்ட நண்பர்களின் சகவாசத்தை உடனடியாக கைவிடுவது சிறந்தது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6
சிம்மம்:
இன்று எதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. பணவரவு இருக்கும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். மனம் விரும்பியது போல செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7
கன்னி:
இன்று உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் சீராக இருக்கும். புதிய கிளைகள் தொடங்குவது போன்ற விரிவாக்க பணிகளை தள்ளி போடுவது நல்லது. துணைத் தொழில் ஆரம்பிக்க எண்ணுபவர்கள் அதற்கான வேலைகளில் இறங்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9
துலாம்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகள் டென்ஷனை கொடுப்பதாக இருக்கும். மேல் அதிகாரிகள் ஆதரவும் இருக்கும். சக ஊழியர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3
விருச்சிகம்:
இன்று குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். உறவினர் வருகை இருக்கும். குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும். சொத்து பிரச்சனைகளில் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6
தனுசு:
இன்று உங்களது செயல்களுக்கு இருந்த தடைகள் நீங்கும். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. கலைத்துறையினர் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களிடையே இடைவெளி குறைய மனம் விட்டு பேசுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6
மகரம்:
இன்று உங்களது செயல்களில் மற்றவர் குறை காண நேரலாம். தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணம் செல்ல நேரலாம். அரசியல் துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7
கும்பம்:
இன்று பயணங்களின் போதும் வாகனங்களை ஓட்டி செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு விரும்பியதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். புத்தகங்கள் கல்விக்கான உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7
மீனம்:
இன்று செல்வம் சேரும். மன அமைதி உண்டாகும். எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியத்தை மீண்டும் செய்து முடிக்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5