இன்றைய ராசிபலன்கள் 12.09.2019

இன்றைய ராசிபலன்கள் 12.09.2019

மேஷம்
இன்று சரியான முடிவுகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாட்கள் கழித்து பழைய நண்பரை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். தொல்லைகளை ஒழித்து கட்டுவீர்கள். தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் தொழில் தொடர்பான செலவும் கூடும். சரக்குகளை வாங்கும்போது கவனித்து வாங்குவதும் பாதுகாப்பாக வைப்பதும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

ரிஷபம்
இன்று அடிக்கடி வீட்டை சுத்தம் செய்வீர்கள். சின்னத்திரை கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளுக்கு பஞ்சமிருக்காது. உயர்கல்வி முடித்து காத்திருக்கும் மாணவ மணிகளுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. உபதொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

மிதுனம்
இன்று தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணிகளில் மட்டும் கவனத்தை செலுத்தினால் போதுமானது. புதிய விளைநிலம் வாங்க முயற்சி செய்பவர்களுக்கு சிறுசிறு தடைகள் ஏற்பட்டு பின்பு சரியாகும். சகவாஷ தோஷத்தை மட்டும் அறவே தவிர்த்து விடுவது நல்லது. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். நிதானமாக பேசி மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது காரிய வெற்றிக்கு உதவும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். எந்த சூழ்நிலையிலும் மனம் தளராது விடாமுயற்சியுடன் காரியங்களை செய்யுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7

கடகம்
இன்று நல்ல நாள். பணம் மற்றும் பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். அவ்வப்போது உடல் நிலை சரியில்லாமல் போகலாம். மேலிடத்திற்கு பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். உங்கள் வசம் உள்ள ஆவணங்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5

சிம்மம்
இன்று முக்கியமுடிவுகளை திறம்பட எடுக்கும் ஒரு தீர்வான நாள். அலுவலகம் சென்று வரும் பெண்கள் நிதானத்துடன் நடந்து கொள்வது அவசியம். தங்களால் இயன்ற தான தர்மங்களை செய்து வாருங்கள். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5

கன்னி
இன்று பொறுமை நிதானம் தேவை. பழைய கடன்கள் ஏதேனும் இருந்தால் அவற்றிலிருந்து விடுபட்டு மனநிம்மதியுடன் காணப்படுவீர்கள். குடும்பம் அமைதியாக இருக்க அனைவரும் விட்டுக் கொடுத்து போவது சரியாக இருக்கும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3

துலாம்
இன்று வாய்ப்புகள் நல்ல படியாக அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக வங்கியில் கடனுதவி பெற விண்ணப்பிருந்தால் இப்போது கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. யாருடனும் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

விருச்சிகம்
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு சக ஊழியர்களிடம் மனக் கசப்பு உண்டாகலாம். அலுவலகத்தில் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டிய நேரம். புதிய வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

தனுசு
இன்று எதிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டி வரலாம். பெண்களுக்கு மகிழ்ச்சி உண்டாகலாம். சக நண்பர்களுடன் பிரச்சினைகள் வரலாம். வீண் விவாதங்களிலில் ஈடுபடாமலிருப்பது நல்லது. தொழிலில் பிரச்சினைகள் வராது. எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மகரம்
இன்று முக்கியமான ஒரு நபரை சந்திக்க நேரும். வாடிக்கையாளர்களின் வருகை மனதிற்கு உற்சாகமளிக்கும். சந்தோசத்திற்கு குறைவிருக்காது. முகம் சுளிக்காமல் வேலை செய்வீர்கள். நல்லது நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மூலம் டென்ஷன் உண்டாகும். கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையில் வாக்கு வாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கும்பம்
இன்று சுப காரியங்கள் பற்றிய பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும். நீண்ட நாட்களாக இருந்த வழக்கு, வியாஜ்ஜியங்கள் முடிவுக்கு அதுவும் உங்களுக்கு சாதகாமாகவே வரும். பெரியோரின் ஆசி கிடக்கும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

மீனம்
இன்று அனுகூலமான நாள் தான். வெற்றிக்கு துணை புரிய இல்லத்தில் இருப்பவர்கள் தயாராக இருப்பார்கள். சிலர் மன வருத்தத்தை உண்டாக்குவார்கள். எதிர்பார்த்திருந்த நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வ பக்தி அதிகரிக்கும். தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

Leave a Reply