இன்றைய ராசிபலன்கள் 21/05/2016
_மேஷம்
குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். தாயாரின் உடல் நலம் சீராகும். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பார்கள். மதியம் 1.15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
ராசி குணங்கள் ரிஷபம்
கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். சிலருக்கு அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
ராசி குணங்கள் மிதுனம்
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். வருமானம் உயரும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
ராசி குணங்கள் கடகம்
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காவிட்டாலும், எதிர்பாராத இடத்திலிருந்து வந்து சேரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். புது வேலைக் கிடைக்கும். பழைய கடனைப் பற்றி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
ராசி குணங்கள் சிம்மம்
சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கம்பீரம் தெரியும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக்கு கூடும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன் உரிமை தருவார்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
ராசி குணங்கள் கன்னி
மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். மகனின் அலட்சியப் போக்கு மாறும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
ராசி குணங்கள் துலாம்
மதியம் 1.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
ராசி குணங்கள் விருச்சிகம்
கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். யாருக்கும் பணம், நகை வாங்குவதில் குறுக்கே நிற்க வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மதியம் 1.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
ராசி குணங்கள் தனுசு
உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிந்து நல்ல செய்தி வரும். நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
ராசி குணங்கள் மகரம்
எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
ராசி குணங்கள் கும்பம்
கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பயணங்களால் ஆதாயமடைவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
ராசி குணங்கள் மீனம்
மதியம் 1.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. உறவினர், நண்பர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்