இன்றைய ராசிபலன்கள் 24.11.2020

மேஷம்இன்று வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கத்தில் செயல்பட்டால் லாபத்தை தக்க வைக்க இயலும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணம் அதிகரிக்கும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் தாமதத்தைச் சந்திப்பர். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9
ராசி பலன்கள்

ரிஷபம்இன்று உத்யோகஸ்தர்கள் பணியிட மாற்றம், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். அதிகாரிகளின் குறிப்பறிந்து செயல்படுவதால் பிரச்னையில் இருந்து விடுபடலாம். சகபணியாளர்களால் பணிச்சுமை ஏற்படும். இருந்தாலும் அதற்கேற்ப வருமானம் கூடும். சக பணியாளர்களிடம் தேவையற்ற விவாதத்தில் ஈடுபடுவது கூடாது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
ராசி பலன்கள்

மிதுனம்இன்று சலுகை பற்றிய எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் வெளிவட்டாரப் பழக்கத்தைக் குறைப்பது நல்லது. ஆரம்ப, மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர், பெற்றோரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது அவசியம். சக தொழிலாளர்களின் உதவியால் முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
ராசி பலன்கள்

கடகம்இன்று அரசியல்வாதிகள் பொது விவகாரங்களில் நேர்மை குணத்துடன் செயல்படுவதால் மட்டுமே அவப்பெயர் வராமல் தவிர்க்கலாம். கலைத்துறையினருக்கு மிகுந்த சந்தோஷங்கள் வந்து சேரும். தடைபட்ட பணவரத்து தடைநீங்கி கைக்கு வந்து சேரும். குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7
ராசி பலன்கள்

சிம்மம்இன்று பிள்ளைகள் பற்றிய மனக்கவலை நீங்கும். கணவன்- மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
ராசி பலன்கள்

கன்னிஇன்று கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. உதவிகள் செய்யும் போது ஆலோசித்து செய்வது நல்லது. பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
ராசி பலன்கள்

துலாம்இன்று எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். எதிலும் தனித்தன்மையை வெளிப்படுத்துவீர்கள். வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கான புதிய வழி உண்டாகும். பொருளாதார நிலை திருப்தி தரும். குடும்பத்தினர் தேவை அனைத்தும் நிறைவேறும். உங்களைப் புறக்கணித்த சொந்தபந்தம், நண்பர்கள் வலிய வந்து உறவு கொண்டாடுவர். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
ராசி பலன்கள்

விருச்சிகம்இன்று மனதில் புத்துணர்வு அதிகரிக்கும். எந்தச் செயலையும் தைரியத்துடன் அணுகுவீர்கள். தம்பி, தங்கையின் சுபநிகழ்ச்சிகளை தலைமையேற்று நடத்துவீர்கள். வீடு, வாகனத்தில் விரும்பிய மாற்றத்தை தாராளச் செலவில் நிறைவேற்றுவீர்கள். வீடு, மனை, ஆடை, ஆபரணங்கள் போனற விஷயங்களில் அவசரம் வேண்டாம். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுக்கவும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
ராசி பலன்கள்

தனுசுஇன்று புத்திரர் நன்கு படித்து கல்வியில் முன்னேற்றம் காண்பர். வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் பெறுவர். பூர்வசொத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிதாகச் சொத்து வாங்கும் யோகமுண்டு. உடல் ஆரோக்கியத்துடன் திகழும். மூத்த சகோதரர்கள் முக்கிய தருணங்களில் தகுந்த ஆலோசனை கூறி வழிநடத்துவர். குடும்ப ஒற்றுமை சிறந்தோங்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
ராசி பலன்கள்

மகரம்இன்று கணிசமாக அளவில் கையிருப்பு உயரும். வெளியூர் பயணத்தை லாபநோக்கில் நடத்தி வெற்றி காண்பீர்கள். திருமணத்தடை நீங்கி திருமணம் இனிதே நடைபெறும். நண்பர்கள் உதவிகள் செய்வர். உங்களது யோசனைகளை அலுவலகத்திலும், குடும்பத்திலும் தெரிவிக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
ராசி பலன்கள்

கும்பம்இன்று உங்களது மேலான யோசனைகளை உங்கள் உயரதிகாரிகள் ஏற்பார்கள். சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்த நிலையும் மாறும். எனினும் வாக்கு கொடுப்பதற்கு முன் யோசித்து கொடுக்கவும். தைரியம் பிரகாசிக்கும். நல்ல விஷயங்களை தள்ளிப் போட வேண்டாம். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
ராசி பலன்கள்

மீனம்இன்று பிள்ளைகள் படிப்பில் மிகுந்த கவனம் தேவை. குழந்தைகள் இல்லாதவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும். சிறிய நோய் என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவம் சார்ந்த செலவுகள் காத்திருக்கின்றன, கவனம் தேவை. கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இருந்தாலும் விட்டு கொடுத்து போவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
ராசி பலன்கள்

Leave a Reply