இன்றைய ராசிபலன்கள் 27/10/2017

இன்றைய ராசிபலன்கள் 27/10/2017

மேஷம்
உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்

ராசி குணங்கள் ரிஷபம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்

ராசி குணங்கள் மிதுனம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். மற்றவர்களுக்காக உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்

ராசி குணங்கள் கடகம்
தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வாத்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே

ராசி குணங்கள் சிம்மம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

ராசி குணங்கள் கன்னி
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் குறையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

ராசி குணங்கள் துலாம்
எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்துப் போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

ராசி குணங்கள் விருச்சிகம்
கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

ராசி குணங்கள் தனுசு
கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். முகப்பொலிவுக் கூடும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்

ராசி குணங்கள் மகரம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே

ராசி குணங்கள் கும்பம்
சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

ராசி குணங்கள் மீனம்
சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். சகோதரங்கள் பாசமழைப் பொழிவார்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்

Leave a Reply