இன்ஸ்டாகிராமில் ஏற்றம், ஜிடிபியில் இறக்கம்: மோடி ஆட்சி குறித்து விமர்சனம்
பிரதமர் மோடி அவர்கள் இன்ஸ்டாகிராமில் 30 மில்லியன் ஃபாலோயர்களை பெற்று உலகின் அதிக ஃபாலோயர்களை வைத்துள்ள அரசியல்வாதி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் இந்தியாவின் வளர்ச்சி வேகம், வங்கதேசம், நேபாளத்தை விட குறைவாக உள்ளதாகவும், 2019 ஆம் ஆண்டின் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும் என்றும் உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் என உலக வங்கி தெரிவித்த நிலையில் தற்போது இரண்டாவது ஆண்டாக இந்தியப் பொருளாதார வளா்ச்சி குறையும் என்று உலக வங்கி குறிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் 2019 ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி இந்தியாவை விட அதிகமாக இருக்கும் என்றும் உலக வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால் இந்திய முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.