இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ள புதிய வசதி
ஸ்னாப்சாட் செயலிக்கு போட்டியாக இன்ஸ்டாகிராம் பல்வேறு புதிய அம்சங்களை வழங்கி வழங்கி வரும் நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் செயலியின் ஸ்டோரீஸ் அம்சத்தில் போர்டிரெயிட் என்னும் அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஸ்டோரீஸ் அம்சத்தில் சேர்க்கப்பட இருக்கும் ஸ்டோரீஸ் அம்சம் ஆண்ட்ராய்டு ஏ.பி.கே. பதிப்பில் காணப்பட்டுள்ளது. இந்த அம்சம் வாடிக்கையாளர்களை போர்டிரெயிட் புகைப்படங்களை பொக்கே எஃபெக்ட்டில் படமாக்க வழி செய்யும். போர்டிரெயிட் மோட் அம்சம் பேக்கிரவுண்டு பிளர் செய்யும் என்பதால் புகைப்படங்களின் தரம் மேம்பட்டிருக்கும்.
போர்டிரெயிட் அம்சம் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் கேமரா ஷட்டர் பட்டனில் வைக்கப்பட்டிருக்கிறது. இதனை இயக்க வலது புறமாக ஸ்வைப் செய்தாலே போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய ஸ்மார்ட்போன்களில் மிகமுக்கிய அம்சங்களில் ஒன்றாக போர்டிரெயிட் மோட் இருக்கிறது.
பிரீமியம் ஸ்மார்ட்போன் முதல் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களிலும் போர்டிரெயிட் மோட் அம்சம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் புதிய அம்சம் மூலம் வாடிக்கையாளர்கள் இன்ஸ்டாகிராம் செயலியில் இருந்தபடியே போர்டிரெயிட் மோட் புகைப்படங்களை படமாக்கி, அவற்றை நேரடியாக பதிவேற்றம் செய்ய முடியும்.
போர்டிரெயிட் மோட் அம்சத்துடன் புகைப்படங்களை எடிட் செய்யும் ஆப்ஷன் வழங்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும் புகைப்படங்களை எடிட் செய்ய ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கும் எடிட்டிங் டூல் மற்றும் பல்வேறு எஃபெக்ட்கள் மூலம் போர்டிரெயிட் புகைப்படங்களை எடிட் செய்ய வழி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் செயலியில் போர்டிரெயிட் மோட் புதிய டிரெண்ட் ஆகும் படி வித்தியாசமான பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக இன்ஸ்டாகிராம் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் அம்சம் வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியானது.