இன்ஸ்டாகிராம் நிறுவனர்கள் இருவர் திடீர் ராஜினாமா
இன்ஸ்டாகிராம் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அதன் நிறுவனர்கள் கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் க்ரீஜெர் ஆகிய இருவரும் திடீரென அந்நிறுவனத்தில் இருந்து விலகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கெவின் சிஸ்ட்ரோம் விடுத்து இருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”மைக்கும், நானும் கடந்த எட்டு ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் நிறுவனத்திலும், கடந்த ஆறு ஆண்டுகளாக பேஸ்புக் நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளோம். இதை உயர்வாக நினைக்கிறோம். எங்களுக்கு சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. மீண்டும் எதிர்காலத்திற்கு தேவையான புதிய யுக்திகளுடன் களத்தில் இறங்குவோம். நாட்டுக்கு என்ன தேவைப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள எங்களுக்கு சிறிது அவகாசம் தேவைப்படுகிறது”
இருப்பினும் பேஸ்புக் தலைமைக்கும், இன்ஸ்டாமிராம் இணை நிறுவனர்களுக்கும் இடையே புகைப்பட பகிர்வு ஆப் தொடர்பான சுய அதிகாரம் தொடர்பான விவகாரத்தில் சிக்கல் நீடித்து அதனால் அவர்கள் இருவரும் வெளியேறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.