இபிஎப் சட்டத்தில் திருத்தம்: 10 ஊழியர்கள் இருந்தாலும் பிஎப் பிடித்தம்- மத்திய அமைச்சர் தகவல்
அதிக ஊழியர்களை வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்குள் கொண்டு வரும் வகையில் தொழி லாளர் வருங்கால வைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப் போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 10 தொழிலாளர்கள் இருந்தாலும் பிஎப் பிடித்தம் செய்யும் வகை யில் சட்டத்திருத்தம் கொண்டு வர இருப்பதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.
தற்போது 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரியும் நிறுவனங்களில் மட்டும் கட்டாயமாக இபிஎஃப் பிடித்தம் செய்யவேண்டும் என்று சட்டம் உள்ளது. தற்போது அதிக ஊழியர்களை சமூக பாதுகாப்புக்குள் கொண்டு வரும் விதமாக இந்த எண்ணிக்கையை குறைக்க இருப்ப தாக பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் அவர் கூறியிருப்பதாவது:
ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 10 தொழிலாளர்கள் பணிபுரிந்தாலும் பிஎப் கட்டாயமாக பிடித்தம் செய்யப்படும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும். தொழிலாளர் வைப்பு நிதியை கட்டாயமாக ஓய்வூதிய திட்டத்துக்கு மாற்றும் வகையில் எந்த ஒரு நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை. நாட்டில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களை சமூக பாதுகாப்பு திட்டங்களுக்குள் கொண்டு வரவே பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமைப்பு சாரா தொழிலாளர்களை மையப்படுத்தியே புதிய திட்டங்களை மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கூட்டத்தில் பீடி சுற்றும் தொழிலா ளர்கள் குறித்து பல்வேறு கருத்து கள் முன்வைக்கப்பட்டன. இந்த சந்திப்பு குறித்த அறிக்கையை சுகாதார அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளோம். பீடி சுற்றும் தொழிலாளர்கள் குழு காப்பீடு திட்டத்தின் கீழ் கொண்டுவரப் பட்டுள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் இயற்கையான மரணம் நிகழ்ந்தால் 10,000 ரூபாயும் விபத்தின் மூலம் மரணம் நிகழ்ந்தால் 25,000 ரூபாயும் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது இவ்வாறு பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.