இமயமலையை வைத்து ஒரு ஆண்ட்ராய்டு கேம்.
எளிமையான மொபைல் கேமும், இமயமலையின் முப்பரிமாண வசதியும் இணைந்தால் எப்படி இருக்கும்? இந்தக் கேள்விக்கான பதிலாக, புதிய மொபைல் கேமான ‘வெர்ன்: தி ஹிமாலயாஸ்’ அமைந்துள்ளது.
கூகுள் நிறுவனம் சார்பில் ஆண்ட்ராய்டு போன்களுக்காக இந்தப் புதிய மொபைல் கேம் அறிமுகமாகி உள்ளது. இந்த விளையாட்டில் பயனாளிகள் விநோதமான பனி உருவத்தின் வடிவில் இமயமலையில் உலா வராலம்.
கூகுள் நிறுவனம் சார்பில் ஆண்ட்ராய்டு போன்களுக்காக இந்தப் புதிய மொபைல் கேம் அறிமுகமாகி உள்ளது. இந்த விளையாட்டில் பயனாளிகள் விநோதமான பனி உருவத்தின் வடிவில் இமயமலையில் உலா வராலம்.
கூகுள் வரைபடத்தின் முப்பரிமானத் தன்மை உதவியுடன் இந்த விளையாட்டில் இமயமலையில் உலா வருவதோடு, எவரெஸ்ட் சிகரத்தையும் எட்டிப்பார்க்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த விளையாட்டின் போக்கில் இமயமலைப் பகுதியில் உள்ள முக்கிய இடங்களையும் அறிமுகம் செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு: http://bit.ly/2aYMqwa