இம்ரான்கான் கட்சி முன்னிலை: அதிபராகும் முதல் கிரிக்கெட் வீரர்

இம்ரான்கான் கட்சி முன்னிலை: அதிபராகும் முதல் கிரிக்கெட் வீரர்

பாகிஸ்தானில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. நவாஸ் ஷரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும், பெனாசிர் பூட்டோ மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.

272 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானில் இம்ரான்கானின் தெரிக்-இ-இன்சாப் கட்சி இதுவரை 114 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. ஆனால் ஆட்சி அமைக்க 137 தொகுதிகள் தேவை. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 57 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் கட்சி 36 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது.

1996ஆம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்கிய இம்ரான்கான் இதுவரை பொது தேர்தல்களில் பெரியளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் தற்போது கிடைத்துள்ள வெற்றியின் மூலம் அவர் உலகின் அதிபராகும் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply