இயக்குனர் ஆகும் திட்டத்தில் பிரபல நட்சத்திரங்களின் வாரிசுகள்
பிரபல இயக்குனர்கள், நடிகர்கள், ஆகியோர் தங்கள் வாரிசுகளை திரைத்துறையில் அறிமுகம் செய்துவருவது பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில் தற்போதைய இளையதலைமுறை வாரிசுகள் நடிப்பதை விட இயக்குனர் துறையை தேர்வு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ரமேஷ்கண்ணாவின் மூத்த மகன் ஜஸ்வந்த், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அதேபோல் அவருடைய இளைய மகன் பிரஜிஷ், இயக்குனர் மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக உள்ளார்.
அதேபோல் நடிகர் செந்தில் மகன் ஹேமச்சந்திரபிரபு இயக்குனர் சிவாவிடமும், சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குனர் விஜய்யிடமும், எழுத்தாளர் பாலகுமாரனின் மகன் சூர்யா இயக்குனர் அட்லியிடமும் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்து வருகின்றனர். மிக விரைவில் இவர்கள் தனியாக படம் இயக்க வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன