இயற்பியலுக்கான நோபல் பரிசும் மூன்று பேருக்கு பகிர்ந்தளிப்பு!
நேற்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று பேர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில் இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசும் மூன்று பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
2019ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகளுக்கான அறிவிப்புகள் தற்போது வெளியாகி வரும் நிலையில் இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது, அதன்படி ஜேம்ஸ் பீப்ள்ஸ், மைக்கேல் மேயர், திதியர் க்யூலோஸ் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
அமெரிக்காவை சேர்ந்த ஜேம்ஸ் பீப்ள்ஸ், விண்வெளியின் தொடக்கம் குறித்த ஆய்வு நடத்தியதற்காக அவருக்கு இந்தப் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல சுவிட்சர்லாந்து நாட்டின் மைக்கேல் மேயர் மற்றும் திதிய க்யூலோஸ் ஆகிய இருவரும் சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள பேகாசி-51 கிரகத்தை கண்டுபிடித்தற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.