இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையம் பரபரப்பு தீர்ப்பு

இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையம் பரபரப்பு தீர்ப்பு

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னம் கட்ந்த சில மாதங்களாக முடக்கப்பட்டிருந்த நிலையில், இந்த சின்னத்தை கைப்பற்ற ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணி, தினகரன் அணி முயற்சி செய்தன. இதுகுறித்த விசாரணை கடந்த சில வாரங்களாக தேர்தல் ஆணையத்தில் நடந்தது. இந்த விசாரணையில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் மற்றும் சசிகலா – தினகரன் ஆகிய இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் சின்னம் யாருக்கு என்பது குறித்த தீர்ப்பை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்திருந்தது.

இந்தநிலையில், இரட்டை இலைச் சின்னம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது. இந்த உத்தரவை அடுத்து அ.தி.மு.க-வின் சின்னம் மட்டுமின்றி அதிமுகவின் கட்சி பெயர், கொடி ஆகியவற்றையும் இனி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அடங்கிய ஒருங்கிணைந்த அணி பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கே பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு என்ற அடிப்படையில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply