இரட்டை சதத்தை நோக்கி விராத் கோஹ்லி: வலுவான நிலையில் இந்தியா
டெல்லியில் நேற்று தொடங்கிய இந்திய இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது
குறைந்த ரன்களில் தவான், மற்றும் புஜாரா ஆகியோர் தங்கள் விக்கெட்டுக்களை இழந்தாலும் தமிழக வீரர் முரளி விஜய் மற்றும் கேப்டன் விராத் கோஹ்லி ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். முரளி விஜய் 155 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனாலும், 156 ரன்கள் எடுத்த விராத் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 90 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்தௌ 371 ரன்கள் குவித்துள்ளது. இந்த போட்டியிலும் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.