இரண்டாவது வீடு வாங்கக்கூடாதா? சென்னை ஐகோர்ட் கேள்வியால் பரபரப்பு
சென்னை ஐகோர்ட்டில் இன்று ஒரு வழக்கின் விசாரணையின்போது, ‘ஒன்றிற்கும் மேற்பட்ட வீடுகள் வாங்க கூடாது என ஏன் கட்டுப்பாடுகள் வரக் கூடாது? என நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தனிநபரின் 2வது வீட்டிற்கு பத்திரப்பதிவு கட்டணம், வரிகளை ஏன் இரட்டிப்பாக்க கூடாது?” என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த கேள்வியால் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடு வாங்க நினைத்தவர்கள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது