இரண்டு நாய்கள் சேர்ந்தால் ஒரு புலியாகிவிடுவதில்லை: வங்கி இணைப்பு குறித்து தினமணி விமர்சனம்

இரண்டு நாய்கள் சேர்ந்தால் ஒரு புலியாகிவிடுவதில்லை: வங்கி இணைப்பு குறித்து தினமணி விமர்சனம்

இழப்பில் இயங்கும் வங்கிகளை பெரிய வங்கிகளுடன் இணைத்து, இழப்பை ஈடுகட்ட அரசு மேலும் நிதியுதவி அளிப்பதால் என்ன நிகழ்ந்துவிடப்போகிறது… ? ஆகமதாபாத் ஐஐஎம் பேராசிரியர் டிடி ராம் மோகன் கூறுவது போல, இரண்டு நாய்கள் சேர்ந்தால் ஒரு புலியாகிவிடுவதில்லை” என தினமணி தலையங்கத்தில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது

இணைப்பு இல்லாமலே நஷ்டத்தில் இயங்கும் வங்கிகளுக்கு நிதியுதவி செய்யலாம், வங்கிகளை இணைத்துதான் நிதியுதவி செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறி வருவதையே தினமணி தலையங்கத்திலும் கூறப்பட்டுள்ளது

மேலும் இழப்பில் இயங்கும் வங்கிகளை, லாபத்தில் இயங்கும் வங்கிகளுடன் இணைப்பதில் பயனில்லை என்றும் இதனை 1993ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கியுடனான நியூ வங்கியின் இணைப்பு உறுதிபடுத்துகிறது என்றும், விஜயா வங்கியும், தேனா வங்கியும் இணைத்ததன் விளைவாக, பரோடா வங்கியின் பங்குகள் ரூ 150லிருந்து, ரூ 92 – ஆக சரிந்தன என்றும் அந்த தலையங்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Leave a Reply