இரண்டு பாடல்கள் ரெடி! தனுஷ் ரசிகர்களை குஷிப்படுத்திய ஜிவி பிரகாஷ்

இரண்டு பாடல்கள் ரெடி! தனுஷ் ரசிகர்களை குஷிப்படுத்திய ஜிவி பிரகாஷ்

நடிப்பு, இசை என இரண்டு துறையிலும் பிசியாக இருக்கும் ஜிவி பிரகாஷ், சமீபத்தில் தனது டுவிட்டரில் விரைவில் ‘அசுரன்’ பாடல் குறித்த தகவலை அறிவிக்கவுள்ளதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது ‘அசுரன்’ படத்தின் இரண்டு பாடல்கள் ரெடி என்றும், அதில் ஒரு பாடல் செம குத்துப்பாடல் என்றும், அந்த பாடலுக்கு தனுஷ் ஆடும் நடனத்தை காண தயாராகுங்கள் என்றும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

 

Leave a Reply