இரண்டு பேட்டிக்கும் நடுவே ஒன்றும் நடக்கவில்லை. நடந்தது இதுதான் ஊடகங்களே!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று இரண்டு முறை ஊடகங்களுக்கு பேட்டியளித்ததை ஒரு சில ஊடகங்கள் திரித்து செய்தியாக வெளியிட்டு வருகின்றனர். முதல் முறை பேட்டி அளிக்கும் போது அவர் பாஜகவிற்கு ஆதரவாக பேசியதாகவும், இரண்டாவது முறை பேட்டி அளிக்கும் போது அவர் பாஜகவுக்கு எதிராக பேசியதாகவும் சில ஊடகங்கள் வேண்டுமென்றே பொய்யான செய்தியை வெளியிட்டு வருகின்றனர்
ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை ஒரு பத்திரிகையாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார். முதல் முறை ரஜினிகாந்த் பேட்டி கொடுக்கும்போது மூன்று ஊடகங்கள் மட்டுமே இருந்ததாகவும், இதனை அடுத்து அங்கு குவிந்த மற்ற ஊடகங்களுக்கும் பேட்டி அளிக்க வேண்டும் என்று ரஜினி தரப்பிடம் கேட்டுக்கொண்டதாகவும் இந்த வேண்டுகோளை ஏற்று அவர் மீண்டும் பேட்டியளிக்க வந்ததாகவும் அந்த செய்தியாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்
இரண்டு பேட்டிகளிலும் செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்குத்தான் அவர் பதிலளித்தார். பாஜகவுக்கு ஆதரவாக பதில் அளிக்க வேண்டும் என்றோ அல்லது எதிராக பதிலளிக்க வேண்டும் என்பதோ அவரது நோக்கம் அல்ல என்பதும் அவரது பதில்களில் இருந்து தெரிந்திருக்கும்