தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 400 க்கும் குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது ஆயிரத்தை தாண்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
நேற்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் ஆயிரத்து 87 என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்ததாகவும் தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
தமிழகத்தில் மூன்று மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தமிழக அரசு ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது