இறந்து போன கணவர் விந்தின் மூலம் குழந்தை. பிரான்ஸ் பெண்ணுக்கு நீதிமன்றம் அனுமதி

இறந்து போன கணவர் விந்தின் மூலம் குழந்தை. பிரான்ஸ் பெண்ணுக்கு நீதிமன்றம் அனுமதி

frenchஇறந்து போன கணவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதில் எந்தவித தவறும் இல்லை என கணவரை இழந்த பெண் ஒருவருக்கு சாதகமாக பிரான்ஸ் தலைமை நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மரியானா கோமெஸ் தூரி என்ற பெண்ணின் கணவர் கடந்த 2015ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக காலமானார். இந்த நிலையில் தனது கணவரின் விந்து அணுக்களை பாதுகாத்து வைத்திருப்பதாகவும் அதன் மூலம் தான் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் பிரான்ஸ் நாட்டு சட்டம் இதற்கு இடம் தராது என்று கூறி அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. பிரான்ஸில் செயற்கை கருவூட்டல் என்பது மலட்டு ஜோடிகளுக்கு மட்டுமே அனுமதி உள்ளது என்றும் இதை பயன்படுத்தி மரியானா குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் வாதாடப்பட்டது.

ஆனால் சட்டங்கள் ஒருவரின் உரிமைகளை பறிக்க கூடாது என்று கூறி மரியானா நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மரியானாவின் வழக்கை ஒரு சிறப்பு வழக்காக எடுத்து விசாரணை நடத்திய நீதிபதிகள் இறந்து போன கணவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள மரியானாவுக்கு உரிமை உண்டு இதில் எவ்வித தவறும் இல்லை என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

Leave a Reply