இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய முடியாது;

சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய வழக்கில் இறுதியாண்டு தேர்வுகளை நடத்தியே தீரவேண்டும் என்றும் ரத்து செய்ய முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது

யுஜிசியிடம் தேர்வுகளை நடத்த காலக்கெடு நீடிக்க வேண்டுமானால் மாநிலங்கள் கோரலாம்என்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி பெற வைக்க மாநிலங்கள் கோர முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் கூறியுள்ளது

இதனை அடுத்து பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்கள் இறுதியாண்டு தேர்வு எழுதிய தீர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை நடத்தலாம்; மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி பெற வைக்க முடியாது என்ற உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply