இலங்கை அதிபரை கொலை செய்ய சதி செய்த இந்தியர் கைது
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக எம்.தாமஸ் என்ற இந்தியரை இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுளார்.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவையும், முன்னாள் ராணுவ மந்திரியும், ராஜேபச்சே தம்பியுமான கோத்தபய ராஜபக்சேவையும் கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்புத்துறை அதிகாரி நமல் குமாரா ஏற்கனவே தெரிவித்த நிலையில் இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட இந்தியர் தாமஸ் சுற்றுலா விசாவில் இலங்கை சென்றிருந்தார். ஆனால் அவர் குறிப்பிட்ட நாளைவிட அதிக காலம் அங்கு சட்ட விரோதமாக தங்கியிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.