இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு!…தேர்தல் எப்போது?

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு!…தேர்தல் எப்போது?

இலங்கையின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்கும் உத்தரவில் அதிபர் சிறிசேன சற்றுமுன் கையெழுத்திட்டார்

ரணில் விக்ரமசிங்கேவுக்கு பதில் புதிய பிரதமராக பொறுப்பேற்ற மஹிந்தா ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னரே இலங்கை அதிபர் சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்தார். 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில், ராஜபட்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு அவருக்கு எம்.பிக்கள் இல்லை என்பதால் இந்த முடிவை அதிபர் சிறிசேன எடுத்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து வரும் ஜனவரியில் அந்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என தெரிகிறது.

அதிபர் சிறிசேனவின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக ரணில் விக்கிரமசிங்கே தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply