இலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

இலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

இலங்கை நாடாளுமன்றத்தை சமீபத்தில் அதிபர் சிறிசேனா திடீரென கலைத்தார். அவ்வாறு கலைக்கப்பட்டதற்கு எதிராக, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரந்தன. இந்த வழக்கில் அதிபர் மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் மஹிந்த ராஜபக்சே, தேர்தல் ஆணையர் மற்றும் அதன் உறுப்பினர்கள் எதிர்மனுதாரர்களாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம், நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜனவரி 5ம் தேதி நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட தேர்தலுக்கும் தடை விதித்துள்ளது. 19ம் தேதி நடைபெற உள்ள அடுத்தகட்ட விசாரணையில் புது உத்தரவு வரும் வரை இதே நிலை தொடரும் என தெரிகிறது. இதனால் மீண்டும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு சபாநாயகர் கரு ஜெயசூர்யா அழைப்பு விடுத்துள்ளார்.

 

Leave a Reply