இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்

இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்

பாஜக, அதிமுக ஆட்சிகளில் வரலாறு காணாத அளவிற்கு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டுள்ளதால் இளைஞர்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இளைஞர்கள் நலனில் எந்தவித அக்கறையும் காட்டாத மத்திய, மாநில அரசுகளை அகற்ற வேண்டும் என்றும், வேலையில்லா திண்டாட்டம் 13.6% முதல் 27.2% உயர்ந்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் புள்ளியியல் துறையின் வேலையில்லா திண்டாட்டத்தின் சதவீதம் கசிந்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply