இளையராஜா75′ நிகழ்ச்சியில் ரஜினி-கமல்

இளையராஜா75′ நிகழ்ச்சியில் ரஜினி-கமல்

விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் ‘இளையராஜா 75’ இசை நிகழ்ச்சியின் டீசரை தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு நிகழ்ச்சிக்கு விளம்பரப்படுத்தி வருகின்றனர். பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னை நந்தனம் மைதானத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் வரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதித்துள்ளதாக தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால் உறுதி செய்துள்ளார்.

ரஜினி மற்றும் கமல் ஒரே பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி இருவரையும் மீண்டும் இணைத்து வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply