இஸ்ரோவுக்கு கிடைத்த அடுத்த வெற்றி: வெற்றிகரமாக ஏவப்பட்ட ஜிசாட்-11

இஸ்ரோவுக்கு கிடைத்த அடுத்த வெற்றி: வெற்றிகரமாக ஏவப்பட்ட ஜிசாட்-11

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ கடந்த சில ஆண்டுகளில் வெற்றிகரமாக பல ராக்கெட்டுக்களை ஏவி வரும் நிலையில் இன்று ஜிசாட்-11 செயற்கைக்கோளை பிரெஞ்ச் கயானாவில் உள்ள கூரு ஏவுத்தளத்தில் இருந்து இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி உள்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..

இந்திய இணையதள சேவையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்டு ஜிசாட்-11 செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜிசாட் -11 செயற்கைக்கோள்மூலம் இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளுக்கும் இணைய சேவை விரைவாகவும் எளிமையாகவும் கிடைக்க வாய்ப்புள்ளது.

அதிக எடை அதாவது 5854 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளை இந்தியாவிலிருந்து அனுப்ப இயலாது என்பதால் தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கூரு ஏவுத்தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

 

Leave a Reply