இஸ்ரோவுக்கு பாராட்டு தெரிவித்த நாசா
இந்திய விஞ்ஞானிகளின் அனுப்பிய சந்திராயன் 2, நிலாவிற்கு மிக அருகில் அதாவது 2.1 கிமீ வரை நெருங்கிய நிலையில், இந்தியாவின் இந்த சாதனையை பல நாடுகள் பாராட்டி வருகின்றன
இந்த நிலையில் சந்திரயான் 2 திட்டத்திற்காக இஸ்ரோ மேற்கொண்ட முயற்சிகளுக்கு நாசா தனது டுவிட்டர் பக்கத்டில் பாராட்டு தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டரை நிலவில் தரையில் இறக்க இஸ்ரோ மேற்கொண்ட கடும் முயற்சி பாராட்டத்தக்கது என்றும், விண்வெளி ஆய்வு திட்டம் என்பது மிகவும் சிக்கலானது கடினமானது என்றும், குறிப்பாக நிலவின் தென்பகுதியில் ஆய்வு செய்வது என்பது ஒரு மகத்தான பணி என்றும், அதை செய்வதற்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 திட்ட முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் என்றும் நாசா கூறியுள்ளது.
மேலும் இஸ்ரோ விஞ்ஞானிகல் தங்களுக்கு ஊக்கமளித்துள்தாகவும், எதிர்காலத்தில் சூரியனை ஆராயும் திட்டங்களில் இணைந்து பணியாற்ற விருப்பபப்டுவதாகவும் நாசா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது