இஸ்லாம் வாழ்வியல்: நன்றாக உபசரியுங்கள்

இஸ்லாம் வாழ்வியல்: நன்றாக உபசரியுங்கள்

5
இஸ்லாமிய உலகின் சட்ட வல்லுநர், பெரும் அறிவு ஜீவிகளில் மிகவும் முக்கியமானவர்களில் இருவர் இமாம் ஷாஃபி மற்றும் இமாம் மாலிக் ஆவார்கள்.

ஒருமுறை இமாம் ஷாஃபி, இமாம் மாலிக்கின் விருந்தினராகச் சென்றார்.

அப்போது இமாம் ஷாஃபிக்குத் தேவையான அனைத்துப் பணிவிடைகளையும் இமாம் மாலிக் தாமே முன்னின்று செய்ததோடு, அவர் இரவில் உறங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

வைகறையில் தொழுகை நேரத்தில் யாரோ சலாம் கூறித் தம்மை எழுப்புவதை அறிந்த இமாம் ஷாஃபி எழுந்து பார்த்தபோது, அங்கே முகம், கை, கால்களை அலம்பிக் கொள்ளத் தண்ணீரைக் குவளையில் ஏந்தியவாறு புன்முறுவலுடன் இமாம் மாலிக் நின்றிருப்பதைக் கண்டார்.

சங்கடத்துடன் நெளிந்த ஷாஃபியிடம் இமாம் மாலிக், “சகோதரரே! நீங்கள் சங்கடமடையத் தேவையில்லை. ஏனென்றால் விருந்தினருக்கு சேவை புரிவது எனது சிறப்புக் கடமையாகும்!” என்றார்.

அதேபோல, விருந்தினராகச் சென்றிருப்பவர் விருந்தளிக்கும் வீட்டார் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்குக் குறைந்தது சிறியளவிலான அன்பளிப்புகளை கொடுப்பது அன்பு பரிமாற்றத்தின் வெளிப்பாடாக இருக்கும்.

விருந்தினர் தனக்கு விருந்தளித்தவர் நலனுக்காக, “இறைவா, இந்தக் குடும்பத்தாரின் வாழ்வியல் தேட்டத்தில் அருள்பொழிவாயாக! இவர்களை மன்னித்தருள்வாயாக! இன்னும் இவர்கள் மீது கருணை சொரிவாயாக!” என்று பிரார்த்திப்பது சிறந்தது.

விருந்தனரின் கடமைகள்

$விருந்தளிப்பவர் வீட்டில் முக்கியமான தேவைகள் அன்றி ஒருக்காலும் மூன்று நாட்களுக்கு மேல் தங்கக் கூடாது.

$“விருந்தினர் அதற்கு மேலும் கவனிக்க முடியாததன் விளைவாக விருந்தளிப்பவர் பாவியாகும் விதமாக அவரது இல்லத்தில் தங்குவது அனுமதிக்கப்பட்டதல்ல!” என்று நபிகளார் எச்சரிக்கிறார்.

$விருந்துபசாரத்தை ஏற்றுக்கொள்ளச் செல்பவர் அந்த விருந்தின் தொடர்ச்சியாக தானும் அவரை விருந்துபசாரத்துக்கு அழைக்க வேண்டும்.

$விருந்தினராகச் செல்லும்போது அங்கேயே தங்கும் சூழ்நிலை ஏற்பட்டால் சிறிய அளவிலான விரிப்பு, துவாலை என்று அத்தியாவசியமான தேவைகளை எடுத்துச் செல்வது நல்லது.

$விருந்தளிப்பவரின் பணிகள் எவ்வகையிலும் தம்மால் தடைப்படக் கூடாது

$விருந்தளிப்பவரின் உபசரிப்பை ஏற்றுக்கொள்ளும் அதேநேரத்தில் அவருக்கு நன்றி சொல்வது சிறந்த பண்பாகும்.

$எளிதில் கிடைக்காத எந்த பொருளையும் கேட்கக் கூடாது.

$விருந்தளிப்பவர் ஏதாவது பணிகளுக்காக வெளியே சென்றிருக்கும்போது, அவரது வீட்டாரிடம் மிகவும் கண்ணியமாக நடந்துகொள்வது மிகவும் முக்கியமானது.

Leave a Reply