இன்று முதல் சென்னைக்குள் செல்வதற்கு இ-பதிவு அவசியம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் இ-பதிவு இல்லாமல் சென்றவர்களை போலீசார் மறித்து விசாரணை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
குறிப்பாக சென்னை அண்ணாசாலையில் இ-பதிவு இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என போலீசார் தடுத்து வாகனங்களை நிறுத்தி விசாரித்து வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
இந்த போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் சிக்கி தவித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
சென்னையில் வாகனங்களில் செல்பவர்களுக்கு இ-பதிவு அவசியம் என்பது நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் என்று பலர் கூறி வருகின்றனர்
இ – பதிவு இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று போலீசார் தடுத்து வாகனங்களை நிறுத்தப்பட்டதால் அண்ணாசாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்.
போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஆம்புலன்ஸ் வாகனங்களும் தவிப்பு. pic.twitter.com/SOeOGZHLlC
— AIADMK – Say No To Drugs & DMK (@AIADMKOfficial) May 18, 2021